வம்சி ஆந்திராவின் சுந்தர்.சி… மகேஷ்பாபு படத்தோட சாயலா இருக்கே? வாரிசு பட ட்ரெயலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 5:29 pm

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த செய்தியை முன்பே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம், வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸையும் அறிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூ-ட்யூப் சேனலில் வெளியாகும். சீ ’யு’ சூன்” என படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் ட்ரெய்லர் எதிர்பார்த்தபடி வெளியானது. ஆனால் ரசிகர்களை திருப்திபடுத்தியதா என்றால் கொஞ்சம் சிரமம்தான் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் ட்ரெய்லர் அல்லு அர்ஜூன் நடித்த வைகுண்டபுரம் போலவும், மகேஷ்பாபு படத்தை போலவும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் படத்தின் இயக்குநர் வம்சி, ஆந்திராவின் சுந்தர் சி என்று கிண்டல் செய்து வருகின்றனர். வழக்கமாக விஜய் பேசும் வசனங்கள் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் மட்டும் உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!