இதெல்லாம் பெருமையா? அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற.. இளையராஜாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 2:45 pm

இசையமைப்பாளர் இளையராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச இசையமைப்பாளராக இருந்தவர். ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசையமைத்து இருக்கும் அவரது பாடல்களுக்கு தற்போதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இளையராஜா தற்போது பாஜக மூலமாக எம்பியாக பதவி பெற்று தற்போது மாநிலங்களை உறுப்பினராக இருந்து வருகிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாய் காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவரது தாயை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

“எனது தாயும் என்னிடம் எதுவுமே கேட்டதில்லை, நானும் எதுவும் கொடுக்கவில்லை” என இளையராஜா அவரது அம்மா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

பெற்ற தாயை கூட கவனிக்கவில்லை என பெருமையாக பேசியிருக்கும் இளையராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 864

    2

    2