“பிரேம்ஜி” பெயரிலே மாமியார் துவங்கிய புதிய தொழில்…. என்னனு பாருங்க!

Author:
31 July 2024, 8:07 am

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் இளைய மகளான பிரேம்ஜி தமிழ் சினிமாவில் நடிகர் ,இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் இப்படி பல துறைகளில் தனது திறமை வெளிப்படுத்தி காட்டி பிரபலமானவராக இருந்து வந்தார்.

இவரது அண்ணன் தான் வெங்கட் பிரபு. தற்போது இவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார். பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. இதனிடையே 47 வயதாகியும் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் டீ ஷர்ட் அணிந்து வந்தார். இதனால், இவருக்கு திருமணமே ஆகாது என எல்லோரும் நினைத்திருந்த சமயத்தில் திடீரென இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் தான் இந்த திருமணம் நடைபெற்றது. தற்போது மனைவியுடன் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பிரேம்ஜி அமரனின் மாமியார் புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஆம், அது குறித்து பிரேம்ஜியின் மனைவி இந்து தனது instagram-ல் தனது அம்மா மசாலா தொழில் துவங்க இருக்கிறார் என பதிவு செய்ய அந்த பதிவிற்கு பிரேம்ஜி “பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா” என கமெண்ட் செய்ய அந்த காமெடியான கமெண்ட்டையே தனது அம்மாவின் தொழில் பெயராக வைத்து விட்டார் இந்து.

அதன்படி “பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா” என்ற பெயரில் இந்த புதிய தொழில் தொடங்க உள்ளதாக அது குறித்த விவரங்களை பதிவிட்டு இருக்கிறார் இந்து . இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பிரேம்ஜி குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…