“காற்றுக்கென்ன வேலி” சீரியல் முக்கிய நடிகை மாற்றம்- இனி இவருக்கு பதில் இவர் தான்..!
Author: Vignesh6 February 2023, 4:30 pm
500 எபிசோடுகளை தாண்டி ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இளம் கலைஞர்கள் நடிக்க கல்லூரி கால கதைக்களத்தில், குடும்பம், காதல், நண்பர்கள், லட்சியம் என சில எமோஷன்கள் கொண்ட கதைக்களத்தில் அமைய மக்களின் பேராதரவை பெற்று வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது நாயகன் மற்றும் நாயகி திருமண டிராக் ஓடுகிறது, இதில் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறது என மக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்த தொடரில் சாரதா என்ற வேடத்தில் ஜோதி என்பவர் நடித்து வந்தார், இவரது நடிப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்திருந்த நிலையில், இப்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து அவர் விலகியிருப்பதாகவும், அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹர்ஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் இது தவறான தேர்வு என்றும், ஜோதி அழகாக நடித்து வந்தார், அவரை மாற்றாதீர்கள் என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.