கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… இனி சஞ்சீவுக்கு பதில் இவரா?
Author: Udayachandran RadhaKrishnan21 November 2024, 11:43 am
சன் டிவியில் 2021ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் இன்றளவும் முதலிடத்தில் உள்ளது.
இரவு 7.30க்கு ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மவுசு அதிகம். கயலுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வந்தனர்.
கயல் சீரியலில் இணைந்த பிரபல நடிகர்
ஒரு வழியாக எழிலுக்கும் கயலுக்கு திருமணம் நடந்தை அடுத்து சீரியல் முடிந்தது என நினைத்த நேரத்தில், தனது தந்தை மீதுள்ள கெட்ட பெயரை நீக்க சொந்த கிராமத்துக்கு செல்கிறார் கயல்.
இதனால் மீண்டும் சீரியல் சூடுபிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கயல் தந்தை கொடுத்த வாக்குக்காக கயலை திருமணம் செய்ய காத்திருக்கும் ஒரு சிறப்பு தோற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கும் இது இரண்டாவது தான்.. நாகசைதன்யாவுக்கு முன் பிரபல தொழிலதிபர்..!
பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜய் விஷ்வாதான் அந்த கேரக்டரில் நடிக்க உள்ளார். இனி அவரால் சீரியலில் நிறைய மாற்றங்கள் சுவராஸ்யங்கள் ஏற்பட் போவதாக கூறப்படுகிறது.
விஜய் விஷ்வா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், கயல் சீரியல் குழு கேட்டுக் கொண்டதால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.