மகாநதி சீரியலில் விஜய்யை தேடி வரும் முன்னாள் காதலி.. புதிய என்ட்ரி கொடுக்கும் நாயகி.. யார் தெரியுமா?..

Author: Vignesh
12 July 2024, 3:33 pm

பொதுவாக விஜய் டிவியில் காலை முதல் இரவு வரைக்கும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, ஆகா கல்யாணம், காற்றுக்கென்ன வேலி, மகாநதி, என அடுத்தடுத்து சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்கா தங்கைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில், இளம் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அடுத்த அடுத்த பல சிற்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர் வரும் ஞாயிறு சிறப்பு தொகுப்பாக மாலை இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரில் புதிய என்ட்ரியாக ஒரு நாயகி வரப்போகும் காட்சிகளை தொடரில் காட்டி விட்டார்கள். அவர் விஜய்யின் முன்னாள் காதலியாக இருப்பார் என்று கணித்த ரசிகர்கள் அவர் யாராக இருப்பார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அவர் வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமான கண்மணி மனோகரன் தானம். இவருக்கு அண்மையில் பிரபல தொகுப்பாளர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!