வெளியானது ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர்..!

Author: Rajesh
25 March 2022, 8:01 pm

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் ‘நானே வருவேன்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது .இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது வெளியான புகைப்படம், அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது போன்று இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1226

    0

    0