எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2024, 10:31 am

சன் டிவி சீரியலுக்கு பெயர் போனது. 90ஸ் முதல் இன்று வரை பல சீரியல்களுக்கு இல்லத்தரசிகர்கள் அடிமையாகி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் பல சீரியல்கள் உள்ளது.

அதில் முக்கியமானது எதிர்நீச்சல் சீரியல். பெண்களின் முன்னேற்றம் குறித்து எடுக்கப்பட்ட சீரியல், ஆரம்பம் முதலே பயங்கர ஹிட் அடித்தது. டிஆர்பியில் அடித்து நொறுக்கிய எதிர்நீச்சல் சீரியல் பின்னர் வலுவிழந்தது.

Ethirneechal 2 Serial New Update

வில்லன் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மரணமடைந்ததால் மெதுமெதுவாக தாக்கம் குறைந்தது. குணசேகரன் இல்லாததால் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதை மக்களும் தவிர்த்தனர்.

ஆதி குணசேகரனாக நடிக்கும் நடிகர் பசுபதி

விறுவிறுப்பு, திருப்புமுனைக்கு பஞ்சமிருக்காத எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். ஆனால் விரைவாகவே சீரியலை முடித்துவிட்டனர்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 வர உள்ளது. சன் டிவியில் ப்ரோமோவும் வெளியானது. இதனால் மீண்டும் பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Actor Pasupathy joined in Ethirneechal 2 Gunasekaran Character

இந்த முறை குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என முதல் பாகத்தின் போதே நெட்டிசனக்ள் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!