நள்ளிரவில் திருத்தணி கோவிலுக்கு வந்த பிரபல நடிகர்… புத்தாண்டில் பக்தர்கள் சர்ப்ரைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 11:36 am

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பெருமான் திருக்கோயில் தமிழர்களின் பிரசித்தி பெற்ற முருக பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்

இந்த திருக்கோயில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு தீப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சாமானிய பக்தர்களுக்கு அனுமதி இரண்டு மணி நேரம் நள்ளிரவில் இல்லை.

Thiruttani Temple

இந்நேரத்தில் விஐபி முக்கிய பக்தர்களுக்கு மட்டும் உள்ளே அமர வைத்து மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

இதையும் படியுங்க: விடாமுயற்சி ட்ராப்? படம் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணம்!

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனத்திற்கு வந்தார் திருக்கோயிலில் உற்சவர் சண்முக பெருமாள் மூலவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் வணங்கிய யோகி பாபு இவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை பிரசாதங்கள் வழங்கப்பட்டது

Yogi Babu Visit Thiruttani Temple

இந்நிகழ்வில் திருக்கோவிலுக்கு வந்த யோகி பாபு உடன் அவரது ரசிகர்கள் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்

  • Sundar C favorite actress Soundarya பிரபல நடிகையை காதல் செய்த சுந்தர் சி…கெடுத்துவிட்ட குஷ்பூ…!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply