அவரு தான் வேணும்.. அடம் பிடித்த பிரேம்ஜியின் வருங்கால மனைவி; லீக்கான ரகசியம்..!

Author: Vignesh
8 June 2024, 5:58 pm

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.

மேலும் படிக்க: ரூ.80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துட்டாங்க.. சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா?..

‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவருக்கு வயது 45 வயதாகிய போதிலும், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வருஷம் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன் என பிரேம்ஜி உறுதியளித்து புத்தாண்டு வாழ்த்து கூறி இருந்தார்.


Premgi Amaren

மேலும் படிக்க: அட ஆச்சரியமா இருக்கே.. காஞ்சனா 4-ல்இவங்கதான் ஹீரோயினா?.. வைரல் பதிவு..!

உடனே பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ளும் பெண் யார் என்று ஊடகங்கள் தேடத் தொடங்கியது. 45 வயதான பிரேம்ஜி 23 வயதான ஒரு இளம் பாடகியை திருமணம் செய்ய போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், பிரேம்ஜியின் திருமண பத்திரிகை வெளியாகி உள்ளது. அதில், ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் அவரின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அந்த பெண்ணின் பெயர் இந்து என பத்திரிக்கையில் இருக்கிறது. சென்னையில், ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரேம்ஜி திருமணம் செய்ய போகும் பெண் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பிரேம்ஜி குடும்பத்தினருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்ததில் திருமணம் செய்ய உள்ள இந்துவின் குடும்பம் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டதாகவும், இந்து வங்கியில் வேலை செய்து வருவதாகவும் இந்த திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், பிரேம்ஜியிடம் முதலில் ப்ரபோஸ் செய்தது இந்துதான் என்றும் கூறப்படுகிறது. தற்போது, திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின் வீட்டில் விஷயத்தை சொல்லி இருவீட்டாரும் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று விசாரித்தவர்களில் சிலர் இப்படி கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 336

    0

    0