சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே செய்திவாசிப்பாளர்களும் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறியவர் கண்மணி சேகர். இந்த நிலையில் தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்த நவீனை திருமணம் செய்து கொண்டார்.
‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நவீன். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண்மணியுடன் திருமணம் என்ற தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார். அதற்குள் இணையத்தில் இது காதல் திருமணம் என்ற தகவல் பரவியது. ஆனால் இது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று நவீனும் கண்மணியும் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் நவீன் – கண்மணி திருமணம் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நவீன் – கண்மணி ஜோடியை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
This website uses cookies.