தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றுபவர்களுக்கு மீடியா உலகில் ஒரு தனி மார்க்கெட்டே இருக்கிறது. சமீப காலமாக செய்தி வாசிப்பாளினிகள் திரைப்பட ஹீரோயின்கள் லெவலுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுகிறார்கள். அவர்களது அழகும், வாசிக்கும் திறனும் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து வெகுவாக ஈர்த்து வருகிறது .

அந்தவகையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளினியாக மக்கள் மனதில் இடத்தை பிடித்தவர்கள் அனிதா சம்பத், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்டோர். இவர்கள் மிகப்பெரிய நட்சத்திர செய்தி வாசிப்பாளினிகளாக ,தொலைக்காட்சி துறையில் இருந்து திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது லிஸ்டில் மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகி வளர்ந்து வந்தவர் தான் செய்தி வாசிப்பாளினான “சௌந்தர்யா அமுதமொழி”.

இவர் பிரபல தனியார் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாலினியாக பணியாற்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தார். கம்பீரமான தமிழ் உச்சரிப்போடு செய்தி வாசித்து வந்த சௌந்தர்யா அமுத மொழிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். இவர் கடந்த 6 மாதங்களாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இயற்கை எழுதியுள்ளார்.
இவரது மரணம் ஒட்டுமொத்த தொலைக்காட்சி வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது. முன்னதாக அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வந்த நிலையில். செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ5.51 லட்சமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் ரூ.50 லட்சமும் நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி சௌந்தர்யா மரணமடைந்துவிட்டார். அவரின் மரணத்திற்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.