மூடப்படும் அபிமான சேனல்; RIP என பதிவிடும் அபிமானிகள்; ஷாக் நியூஸ்

Author: Sudha
9 July 2024, 6:41 pm

டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் ஷோ, கரேஜ் த கவர்ட்லி டாக், பென் 10, ஸ்கூபி டூ போன்ற கார்ட்டூன் தொடர்களை குழந்தைகளுக்கு வழங்கி குழந்தைகளை மகிழ்வித்த கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேனல் 1992 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் அவர்களின் டிஸ்னி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிகவும் பிரபலம் அடைந்தது.குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த தொலைக்காட்சியின் விற்பனை அதிகரித்து உச்சத்தை எட்டியது.புது புது நுட்பங்கள் நிகழ்ச்சிகளை புகுத்தியது.இதனால் 90களில் பிறந்த குழந்தைகளின் விருப்பத்திற்குரிய ஒரு சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் மாறியது.

இந்த நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் விரைவில் மூடப்பட உள்ளதாக இணையதளத்தில் செய்தி பரவியது.இதை கேள்விப்பட்ட கார்ட்டூன் நெட்வொர்க் அபிமானிகள் பலரும் எக்ஸ் தளத்தில் ஆர்ஐபி கார்ட்டூன் நெட்வொர்க் என தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் கார்ட்டூன் நெட்வொர்க் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu