விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள்?.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Author: Vignesh
21 August 2023, 7:50 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சஞ்சய்யும் படிப்பை முடித்து குறும்படத்தினை இயக்கி வெளியீட்டும் இருந்தார். அதே சமயம், அப்பாவை போல் மகன் சஞ்சய் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.

மேலும், விஜய் மகன் சஞ்சய்யை தான் தன் மகளுக்கு ஜோடியாக நடிக்க வைக்க போவதாக தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவும், இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.

devayani -updatenews360

தற்போது 18 வயதை தாண்டி பிறந்தநாள் பார்ட்டி நடத்தி போட்டோ சூட் எடுத்திருக்கிறார் ஜோவிகா. ஒரு பேட்டியில், தன் மகளை சினிமாவில் நடிக்க வைக்க போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சஞ்சய்க்கு ஜோடியாக அடுத்த இளம் வாரிசு ரெடி என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1045

    3

    1