தமிழ் சினிமாவின் அடுத்த பிரபலத்தின் மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கியவர் பட்டியல் சேகர். இவரது மகன்கள் விஷ்ணுவர்தன் இயக்குனரகாவும், கிருஷ்ணா நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும், பில்லா, பட்டியல், ஆரம்பம் என ஹிட் படங்களை இயக்கியவர்.
இந்நிலையில் 63 வயதான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்தை தயாரித்தவர் சேகர்.
இந்தப்படத்தை தயாரித்ததால் இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தையாவார்.
‘பட்டியல்’ படம் தவிர கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ மற்றும் அலிபாபா படங்களை தயாரித்துள்ளார் சேகர். மேலும் இவர் வீரா நடித்த ‘ராஜதந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
பட்டியல் சேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பட்டியல் சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.