நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.
இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான நேற்று வெளியிட்டு இருக்கிறார்.
அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக
குறிப்பிட்டு இருக்கிறார்.
1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.
மேலும், இதுவரை கமிட் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் விஜய் ஈடுபடுவார் என கூறப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகையின் காரணமாக சினிமாவில் அவருடைய இடத்தை வேறு யார் பிடிக்கப் போகிறார் என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது. வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது, அரசியலில் களமிறங்குவதன் காரணமாக இனி தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தில் யார் இருக்கப் போகிறார்.
அடுத்த தளபதி யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், முன்னதாக தனக்கு என்று பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் விஜய். குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் கதாநாயகனால் மட்டுமே விஜய் இடத்தை பிடிக்க முடியும் என்பதை பலருடைய கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பலரும் சிவகார்த்திகேயன் பெயரை டிக் அடித்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில், விஜய்க்கு அடுத்தபடியாக அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். முன்னதாக, விஜய் இடத்தை பிடிக்க பலருக்குக்கும் ஆசை இருக்கும், போட்டி போடும் எண்ணமும் இருக்கும். அதனால், வெற்றி பெறப் போகிற வரை காலம் தான் முடிவு செய்யும்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.