தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகராக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகர் கவின்.சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் இல்லத்தரசிகளிடையே மிகவும் ஃபேமஸானார் .
அதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையே ஏற்படுத்திக் கொண்டார் நடிகர் கவின் .
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஆன லாஸ்லியா நெருக்கமாக பழகி இவரை காதலித்து வந்தார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து கவின் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை அடுத்து ஸ்டார் திரைப்படம் அவருக்கு மாபெரும் பெயரையும் புகழும் தேடி கொடுத்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த நடிகர் கவின் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கவினிடம் விஜய் சார் அரசியலுக்கு போயிட்டாரு… அஜித் சார் கார் ரேஸ் போறதா சொல்றாங்க… அப்போ அந்த இடத்துக்கு நீங்க வருவீங்களா? என்று கவினிடம் கேள்வி கேட்டதற்கு…
இதையும் படியுங்கள்: என் வளர்ச்சிக்கு காரணம் என் மனைவி தான்….. கலங்கிய விஜய் TV கோபிநாத்!
ஷாக்காகி…அதெல்லாம் மிகப்பெரிய இடம் அதுக்கு பெரிய பெரிய சீனியர் ஹீரோக்கள் இருக்காங்க சும்மா நாளு அஞ்சு படம் நடிச்சிடலாம் அவ்ளோ பெரிய இடத்துக்கு போக முடியாது பல வருஷம் உழைக்கணும் எனக்கு நல்ல படம் கொடுத்தால் மட்டும் போதும் என்று நடிகர் கவின் தெரிவித்திருந்தார். அவரின் இந்த தன்னடக்கமான பேச்சு பலது பாராட்டுகளை பெற்று வருகிறது.