300 கிலோ ஹெராயின் கடத்தல்.. விசாரணைக்கு ஆஜராக நடிகை வரலட்சுமிக்கு NIA நோட்டீஸ்..!

Author: Vignesh
29 August 2023, 3:15 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar-updatenews360

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதி லிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதை பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டார். மேலும், போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் ஆதி லிங்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஆதி லிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என NIA சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு நடிகை வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 632

    0

    0