“வாழை” பட பாடலை கேட்டால் “அழகிய லைலா”வை மறந்துடுவீங்க -நிகிலா விமல் செய்த சம்பவம்!

Author:
23 August 2024, 3:15 pm

வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாழை. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் மாரி செல்வராஜ்.

அடிதட்டு மக்களின் ஜாதிய அடிப்படையில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மேல் சாதியினரின் அடாவடித்தனத்தையும், ஆணவத்தையும் தோலுரித்துக் காட்டியது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்று பல பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.

இப்படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் பேசும் என கூறப்படுகிறது. தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இப்படம் வெளியாகி உள்ள நிலையில் நடிகை நிகிலா விமல் நடிப்பு ரசிகர்கள் எல்லோரையும் வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. வாழைப்பழத்தில் நிகிலா விமல் பூங்கொடி டீச்சராக நடித்திருக்கிறார். பூங்கொடி பெயரில் வரும் பாடல்களை சிவனைந்தான் பாடும் காட்சிகளும் டீச்சரை விரும்பும் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. மாணவர்கள் டீச்சரின் மீது காதல் வயப்பட்டாலும் டீச்சர் மாணவர்களை எப்படி அன்பாக பார்ப்பார்களோ அதே மாதிரியே மாணவர்களை அணுகுகிறார் நிகிலா விமல்.

வாழை படத்தில் பள்ளியின் ஆண்டு விழாவுக்காக பயிற்சி கொடுக்கும் போது பூங்கொடி டீச்சரான நிகிலா விமல் “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருப்பார். இந்த பாடலை தியேட்டரில் ரசிகர்கள் பார்த்தால் “அழகிய லைலா” பாடலையே மறந்திடுவார்கள். அந்த அளவுக்கு இந்த பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலில் எல்லோரையும் வசீகரித்துவிட்டார் நிகிலா விமல் என்கிறார்கள் திரைப்படத்தை பார்த்த ஆடியன்ஸ்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!