திருமணத்திற்கு தேதி குறித்த ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி..!

Author: Rajesh
14 May 2022, 1:24 pm

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், வரும் மே 18-ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடிகர்களின் வீடுகளில் நடைபெறும் அதே வேளையில், சென்னையின் முக்கியப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மே 18-ம் தேதி மாலை அவர்களின் திருமண வரவேற்பு நடக்கவிருக்கிறது. அதில் திரையுலகில் உள்ள ஆதி-நிக்கியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

ஆதியும் நிக்கியும் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் இருந்தாலும் சென்னையில் தங்கள் திருமணத்தை நடத்த ஆர்வமாக இருந்ததாக தெரிகிறது.
ஆதியின் தந்தை, ரவி ராஜா, ஒரு புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், அவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். ஆதி பல படங்களில் நடித்துள்ளார், அதேபோல் நிக்கியும் நடித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!