ஐஸ்வர்யா ராய் பிரிந்து பிரபல நடிகையை டேட்டிங் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Author:
2 November 2024, 6:35 pm

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி மற்றும் ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

aishwarya-rai

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கே அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

இவர் நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் ஆன விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் உடன் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி லிவிங் லைஃப் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது. இதனிடையே அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை காதலிப்பதாக அடம் பிடித்து தன்னுடைய அப்பா அமிதாப் பச்சனிடம் கூறியதால் வேறு வழி இன்றி ஐஸ்வர்யா ராயை தன் மகனுக்கு மனம் முடித்து வைத்தார் அபிஷேக் பச்சன். இதையடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

abhisjek nimrat

இதனிடையே திடீரென ஐஸ்வர்யாராய் தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என செய்திகள் அடுத்தடுத்து வெளியாகியது. இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை நிம்ரத் கவுர் உடன் நடிகர் அபிஷேக் பச்சன் டேட்டிங் செய்து வருவதோடு ரகசியமாக அவரை காதலித்து வருகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து நடிகை நிம்ரத் கவுர் இடம் கேள்வி எழுப்பியதற்கு… அவர், “நான் என்னதான் சொன்னாலும் இந்த கிசுகிசுக்கள் நிற்கப்போவதில்லை. மேலும் இந்த கிசுகிசுக்களை நிறுத்தும் சக்தியும் என்னிடத்தில் இல்லை. அதனால் நான் இவற்றிற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக என்னுடைய வேலை பார்ப்பது தான் சரி என எனக்கு தோன்றுகிறது .

என்னுடைய வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகிறேன். தயவு செய்து இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என பதில் நிம்ரத் கவுர் கூறினார். அவரின் இந்த பதில் கிட்டத்தட்ட ரகசியமாக டேட்டிங் செய்வது வருவது உறுதி தான் என சொல்லாமல் சொல்லிவிட்டதாக பாலிவுட் காரர்கள் கூறுகிறார்கள் .

முன்னதாக ஒரு பேட்டியில் பேசியபோது அபிஷேக் பச்சனிடம் 15 ஆண்டு கால திருமண பந்தம் குறித்து கேள்வி எழுப்பும் போது அதற்கு பதில் அளித்த நடிகை நிம்ரத் கவுர்…. திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவிக்கிறார். உடனே அதைக் கேட்டு அபிஷேக் பச்சன் நன்றி எனக் கூறிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவர் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறது உண்மைதான். இதனால் தான் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்கிறார் என வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள்.. பொக்கிஷத்தை தவற விட்டு நிச்சயம் ஒரு நாள் வேதனைப்படுவார் என அபிஷேக் பச்சனை திட்டி தீர்த்து சாபம் விட்டு வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 111

    0

    0