மீண்டும் கர்ப்பம்… 8 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது குழந்தை – பிக்பாஸ் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Author: Shree
12 June 2023, 1:20 pm

பிரபல விஜே மற்றும் சீரியல் நடிகையுமான நிஷா கணேஷ் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து வள்ளி,தெய்வமகள், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

மிகவும் பவ்யமான, குடும்ப பாங்கான தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தும் அவர் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட் ராமனை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். கணேஷ் ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் என்னை போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்நிலையில் நிஷா கணேஷ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கர்ப்பமான போட்டோ ஒன்றை வெளியிட்டு ” தாய்மையின் அழகு ஒருவரை தன்னில் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்ளும்” என கேப்ஷன் கொடுத்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!