பணக்காரர்கள் எது செய்தாலும் ஓகே.. நீடா அம்பானியை விமர்சித்த பிரபல நடிகை..!
Author: Vignesh23 July 2024, 6:19 pm
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில், இந்த திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் விலை உயர்ந்த நகைகள் ஆடைகளை அணிந்திருந்தனர். அதிலும், காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்தார். இந்த புடவை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், காயத்திரி மந்திரம் பொறித்த சேலையை நீதா அம்பானி அணிந்திருந்த தொடர்பாக பாஜக எதிர்ப்பாளர் திமுக ஆதரவாளருமான நடிகை ஷர்மிளா கருத்து தெரிவித்த வீடியோவில் பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த சேலையில் காயத்ரி மந்திரத்தை சேர்த்து நெய்து இருந்தது. இந்த புடவையை அவர் போட்டோகிராபர்களுக்கு காட்டும் வகையில் காலால் புடவையை அட்ஜஸ்ட் செய்கிறார். ஒரு கேள்வியை கேட்கிறேன் நீதா காயத்ரி மந்திரம் குறித்த சேலையை காலால் உதைக்கும் போது உங்களது கலாச்சாரம் பாதிக்கப்படவில்லையா? இந்து மதம் புண்படுத்தப்படவில்லையா? அவமானப்படுத்தப்படவில்லையா? பணக்காரர்கள் எது செய்தாலும் ஓகே இதுதான் இரட்டை நிலைப்பாடு இதற்கு பதில் சொல்லுங்கள் என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.