ஆத்தி… நீங்களா இது? துளி கூட மேக்கப் இல்லாமல் நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம்!

Author: Shree
13 May 2023, 9:54 pm

பப்ளி லுக் அழகால் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

2011 -ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். தமிழில் கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை நித்யா மேனன் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு #MasterPeace என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!