நிவேதா பெத்துராஜிற்கு இவ்வளவு திறமையா? கோப்பையுடன் வெளியிட்ட போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Rajesh
23 January 2024, 7:15 pm

மதுரையில் பிறந்து வளர்ந்து துபாயில் வளர்ந்து அழகு பொம்மையாக கோலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த இளசுகளின் மனதிலும் ஆழமான இடத்தை தக்கவைத்தவைத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

இதனால் தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். திரைப்படங்களை தாண்டி தாண்டி தனக்கு பிடித்த கார் ரேஸில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அத்துடன் பாட்மிண்டன் விளையாட்டிலும் ஈடுபாடு காட்டி வரும் அவர் தற்போது பாட்மிண்டன் விளையாடி கோப்பை வென்று இருக்கும் புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டு இருக்கிறார். நடிப்பையும் தாண்டி அவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வாழ்த்து கூறி வருகிறார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 354

    0

    0