அந்த மாதிரி பண்ணதை.. வீட்டுல பாத்துட்டாங்க… நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக்..!

Author: Vignesh
30 September 2023, 3:15 pm

அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

nivetha pethuraj - updatenews360

இதனால், தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

nivetha pethuraj - updatenews360

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ்யிடம் கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்ததாகவும், தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் தான் கிளாமராக நடித்ததாகவும். comfort zone ல் இருந்து கொஞ்சம் தள்ளி அந்த படத்தில் நடித்ததாகவும், ஆனால் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும், தான் உறுதியாக இருக்கிறேன். இனி இதுபோன்ற கவர்ச்சியான படங்களில் நடிக்க கூடாது என்றும், படத்தை பார்க்கும் போது தன் அப்பா அம்மாவும் முகம் சுளிக்கும்படி இருக்க கூடாது என்று நினைவில் வைத்திருப்பதாகவும் நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ