காதலில் விழுந்த நிவேதா தாமஸ்.. ‘அந்த’ அதிர்ஷ்டசாலி யார்?.. தீயாய் பரவும் பதிவு..!

Author: Vignesh
25 June 2024, 10:13 am

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ் தமிழில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகனார்.

சரஸ்வதி சபதம் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானர். பின்னர், கமல் படத்தில் வெளிவந்த பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், ஜெயின் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படம் தான் இவருக்கு கதாநாயகியாக தமிழில் அங்கீகாரத்தை கொடுத்தது. தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நிவேதா தாமஸ் இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் “It’s been a while….. but. Finally!” என குறிப்பிட்டு ஹார்ட் சிம்பல் உடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், இவர் காதலித்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த அதிர்ஷ்டசாலி யார் என்றும் கேள்வியை எழுப்பிய வருகின்றனர்.

  • Madhampatty Rangaraj Illegal Affairs கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!