என் மீது அபாண்டமான பொய் சுமத்துறாங்க… பாலியல் புகாருக்கு பொங்கி எழுந்த நிவின் பாலி!

Author:
4 September 2024, 11:31 am

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது புகார் கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

நிவின் பாலி மீது பாலியல் புகார்:

இந்நிலையில் பிரேமம் பட நடிகர் நிவின் பாலி மீது நேர்யமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Nivin Pauly

அதில் அவர் கூறியிருப்பதாவது…. நடிகர் நிவின் பாலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு செய்தார். அவருடன் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என கூறி அதிர வைத்துள்ளார்.

நேர்யமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொச்சி ரூரல் எஸ்பிக்கு முதலில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் ஊன்னுக்கள் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கூட்டு பாலியல் பலாத்காரம்….

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு வேலையாக துபாய்க்கு சென்ற சமயத்தில் சிரியா என்ற பெண் தனக்கு நிவின் பாலி அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிய நிவின்பாலி மற்றும் அவருடன் சேர்ந்த 4 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று அந்த இளம் பெண் தெரிவித்திருக்கிறார்.

nivin pauly hema committee

இதை அடுத்து நடிகர்கள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர் அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் நிவின்பாலி சிரியா உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார் .

இந்த தகவல் அறிக்கையில் ஸ்ரீயா முதல் குற்றவாளியாகவும் நடிகர் நிவின் பாலி ஆறாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார். பலகோடி ரசிகர்களை கொண்ட நடிகர் நிவின் பாலி பாலியல் தொந்தரவு செய்திருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் இந்த பூனையும் பால் குடிக்குமா? என அதிர்ச்சியாகி விட்டனர் .

இதையடுத்து அடுத்து அந்த பெண்ணிற்கு நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது எனக்கு எதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு என் கவனத்திற்கு வந்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இது உண்மைக்கு புறம்பானது மோசமான உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

என் மீது அபாண்டமான பொய் சுமத்துறாங்க…

இதன் பின்னால் செயல்படுபவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நான் செல்வேன். என்னை புரிந்து கொண்டு தொலைபேசி மூலம் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

nivin pauly

பின்னர் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த நிவின் பாலி இது பற்றி கூறுகையில்… இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் நான் இரவிலே செய்தியாளர்களை சந்திக்கிறேன்.. முதன்முதலாக எனக்கு எதிராக இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது.

புகார் அளித்துள்ள பெண்ணை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட இல்லை. பேசியது கூட இல்லை. எனக்காக நான் தான் பேச வேண்டும். நாளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படலாம்.

இனிமேல் சும்மா விடமாட்டேன்:

அவர்களுக்காகவும் தான் நான் இதை பேசுகிறேன். சினிமாவில் உள்ளவர்களும் இல்லாதவர்களும் எதிராக இதுபோன்று குற்றச்சாட்டுகள் கூறப்படலாம். இந்த குற்றச்சாட்டை என்னையும் என் குடும்பத்தையும் பல வகையில் பாதித்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதி.

actor nivin pauly

எனவே சட்டம் சட்டத்தின் படி செயல்படட்டும். இதை சட்டத்தின் வழியில் எதிர்கொள்வேன். கடந்த ஒன்றரை மாதம் முன்பும் இதுபோன்ற புகார் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்திருந்தார்கள்.

நான் அந்தப் பெண் யார்? என்று எனக்கு தெரியாது எனக் கூறியதை அடுத்து அது முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்து நான் அப்போது அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இனிமேல் அப்டி விடமாட்டேன் என நிவின் பாலி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 334

    0

    0