டபுள் எவிக்ஷன்.. ஜோடியாக எலிமினேட் ஆன நிக்சன், ரவீனா வாங்கிய சம்பளம்..! இத்தனை லட்சமா?..
Author: Vignesh1 January 2024, 10:46 am
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.
டிக்கெட் டு பினாலே டாஸ்கிகள் வெற்றி பெற்ற விஷ்ணு முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதனிடையே, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவித்து போட்டியாளர்களுக்கு கமலஹாசன் அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதன்படி, மக்கள் எடுத்த வாக்குகள் அடிப்படையில், குறைவான வாக்குகளை பெற்று கடைசி ரெண்டு இடங்களை பிடித்த நிக்ஸன் மற்றும் ரவீனா ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இதனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் மணி, விஷ்ணு, விசித்திரா, பூர்ணிமா, மாயா, தினேஷ், அர்ச்சனா, விஜய் வருமா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில், இந்த வாரம் எலிமினான நிக்சன் மற்றும் ரவீனாவின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு 18000 வழங்கப்பட்டது. இதன் மூலம் 90 நாட்களுக்கு அவருக்கு மொத்தமாக 16 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைப்போல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிக அளவில் சர்ச்சையில் சிக்கிய போட்டியாளராக வளம் வந்த நிக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் அவர் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்த 90 நாட்களுக்கு அவருக்கு ரூபாய் 10 லட்சத்தை 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.