நிக்சனின் எச்சத்தனம்.. காரி துப்பிய போட்டியாளர்கள்.. வெளியான புதிய ப்ரோமோ..!

Author: Vignesh
8 November 2023, 12:05 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த ஒரு சில பெண் போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் விமர்சித்து இருப்பதற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது Body shaming, Sexist மனநிலையில் உச்சக்கட்டம் எனவும், இதனால் தான் வினுஷாவை இவர்கள் மோசமாக நடத்துகிறார்களா? கமல் ஹாசன் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என சனம் ஷெட்டி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணதை கூட மன்னிச்சிடுவேன். ஆனால், இதனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா அப்படினு பேசிட்டு, பாடி ஷேமிங் பண்ணி இருக்கான். எனக்கு வெளியே வந்ததும் அதிர்ச்சியை தான் ஏற்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்பு செய்து, இதற்கான விளக்கத்தை அவரின் முன்னிலையில் கூற வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சன் குறித்து தவறான வகையில் பேசிய தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார். அதே போல், ஜோவிகா தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐசு, மாயா குறித்து பேசிய வார்த்தை என அனைவருக்கும் செக் வைத்துள்ளார் பிக் பாஸ். இதனால், கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று சொல்லலாம்.

.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!