இன்னுமா நீ திருந்தல… பிக் பாஸை விட்டு வெளியேறியும் ஐஷுவை விடாமல் துரத்தும் நிக்சன்..!
Author: Vignesh6 January 2024, 9:46 am
விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் 91 நாட்களைக் கடந்து எலிமினேஷன் செய்யப்பட்டு நிக்ஸன் வெளியேறிய நிலையில், தனது இன்ஸ்டா முதல் பதிவு ஒன்றே போட்டதற்கு பல்வேறு நெகடிவ் விமர்சனங்களை கிடைத்தது.

இப்பதான் எல்லாத்தையும் பார்த்தேன். என்ன ஃபீல் எவ்வளவு சப்போர்ட் எவ்வளவு பேருக்கு என்ன புடிச்சிருக்கு, உள்ளே இருக்கிற வரைக்கும் எனக்கு தெரியல, அது ஒருவேளை தெரிந்திருந்தா இன்னும் எஃபெக்ட் போட்டு இருப்பேன்னு நினைக்கிறேன். அதெல்லாம் யோசிக்கவே இல்லை என்னை மன்னிச்சிடுங்க என்று பதிவிட்டு இருந்தார்.
இப்படி ஒரு நிலையில், தனது இன்ஸ்டா முதல் பதிவை போட்ட நிக்ஸனை 30 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவு கொடுத்தும், மீதமுள்ள 70% பேர் இவரை கமெண்ட்ஸில் திட்டி தீர்த்தம் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில், தனது கமன்ட் பகுதியையே நிக்சன் முடக்கி இருந்தார்.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐஷுவை காதல் வலையில் வீழ்த்தி எல்லை மீறிய ரொமான்ஸ் செய்ததால் மக்கள் நிக்ஸன் மீது கடும் கோபம் அடைந்தனர். நாமினேஷனில் இருந்து ஒவ்வொரு வாரமும் தப்பிட்டு தப்பித்துக் கொண்டிருந்த நிக்சன். கடந்த வாரம் வசமாக சிக்கி எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சினிமாவிலும் மற்ற விஷயங்களும் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஐஷுடன் இருந்த வீடியோக்களை தற்போது, இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் டேய் இன்னுமாடா நீ திருந்தல என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.