விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!
Author: Selvan19 March 2025, 9:54 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிழல்கள் ரவி
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில்,2000ஆம் ஆண்டு வெளியான ‘குஷி’ படத்தின் முக்கிய நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படம்,தளபதி விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மைல்கல் திரைப்படமாக அமைந்தது.
இப்படத்தில்,விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.மேலும், மும்தாஜ்,விவேக், விஜயகுமார்,ஷில்பா ஷெட்டி,நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரித்த இப்படம்,3 கோடி பட்ஜெட்டில் தயாராகி 22 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
குஷி படத்தில்,விஜய்யின் தந்தையாக நடித்திருந்த நிழல்கள் ரவி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.விஜய்யின் 69-ஆவது படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அவர் மீண்டும் விஜய்யின் அப்பாவாகவே நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.