பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2025, 11:19 am
சினிமாவில் உள்ள நடிகர்களுக்கும், இந்த பழமொழிக்கும் பொருத்தம் அதிகம் என்றே சொல்லலாம், அந்த பழமொழிதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
வாய்ப்பு உள்ள போதே சரியாக பயன்படுத்தினால் சினிமாவில் கோலோச்சி விடலாம். இது நிறைய நடிகர்களுக்கு பொருந்தும். குறிப்பாக பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு நன்றாக பொருந்தும்.
இதையும் படியுங்க : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் டபுள் ட்ரீட்.. இனி சரவெடிதான்!
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் பெரியதாக வாய்ப்பே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. படையப்பா படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்ட அவர், தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே தான் பாகுபலி வாய்ப்பு மீண்டும் சினிமாவில் அவரை தலைதூக்கியது. தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு நீண்ட நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இருந்தாலும் மாதம் ₹5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். எப்படி என்றால், அவர் ஐதராபாத்தில் 5 நகைக் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். அதில் அவருக்கு பண மழை கொட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.