கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்
Author: Prasad12 April 2025, 11:39 am
தொடர் தோல்வி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இந்த ரன்களை சேஸ் செய்து ஆடிய கொல்கத்தா அணி 10 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

CSK அணிக்கு இது 5 ஆவது தோல்வியாகும். அதுவும் தொடர்ந்து 5 முறை தோல்வியடைந்துள்ளது சென்னை அணி ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனிநபர் பெரியவர் அல்ல?
“ஒரு கிரிக்கெட்டராக நான் இதனை பேசுவதை தவிர்த்துவிட வேண்டும், தவிர்த்துவிட வேண்டும் என தவிர்த்துக்கொண்டே இருந்தேன். விரைவில் முடிவுக்கு வர வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால் இது மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஏன் இவ்வளவு கீழாக Down the Order வரவேண்டும். எந்த விளையாட்டையாவது வெற்றிபெற கூடாது என விளையாடுவார்களா?
ஒரு சர்க்கஸ் கூடாரத்திற்கு செல்வது போல்தான் இது இருக்கிறது. எந்த ஒரு தனிநபரும் கிரிக்கெட்டை விட பெரியவர் அல்ல” என சென்னை அணியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.