தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் கடின உழைப்பால் விமர்சனங்களை தூக்கி எறிந்து அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர்.
நேற்று நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணமான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அஜித் குமாரின் தந்தை கேரளாவை சேர்ந்தவர், தாய் கராச்சியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு மொத்தம் மூன்று ஆண் பிள்ளைகள் ஆவார். அதில் இரண்டாவது மகனாகப் பிறந்தார் தான் அஜித்.
அஜித் தந்தை வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கே வந்துவிட்டனர். அதற்கு பின்னர் இவர்கள் சென்னைக்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து.
இப்படி ஒரு நிலையில் தந்தை மணி என்கிற சுப்ரமணி நேற்று அதிகாலை காலமாகி இருக்கும் சம்பவம் அஜித் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாக இருந்தது. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 84.
இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபனும் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
அந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள பார்த்திபன் ‘தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார். மயானம் செல்ல வந்தவருக்கு காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது’ என்று பதிவிட்டுள்ளார்.
அஜித், பார்த்திபன் இருவரும் இணைந்து ராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நீ வருவாய் என படத்தில் நடித்துள்ளார்கள்.
தான் நடித்த படத்தில் அஜித் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் போது அஜித்தை ஒரு போட்டோ ஷூட்டின் போது மட்டுமே பார்த்திபன் சந்தித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.