தென்னிந்திய சினிமா நடிகர்களை சிறுமைப்படுத்தும் வட இந்தியர்கள்..! தக்க பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்..!
Author: Rajesh10 பிப்ரவரி 2022, 3:38 மணி
நடிகை சுருதி ஹாசன் இந்தியில் வெளியான லக் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கை விட இந்தி திரையுலகில் தான் அதிகம் நடித்துள்ளார். மேலும் இந்தி மொழியில் சரளமாக அவருக்கு பேசவும் தெரியும். இருந்தபோதிலும் அவரை தென்னிந்தியர் என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர் வடஇந்தியர்கள்.
வடஇந்தியாவில் இருப்பவர்களை பொறுத்தவரை இந்தியா என்பது வடஇந்தியா என்பது தான். அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொது மக்களாக இருந்தாலும் சரி.. தென்னிந்தியா என்ற அடைமொழி உடனே எப்போதும் கூறி வருகின்றனர்.
திரையுலகில் இந்த இந்திய சினிமா – தென்னிந்திய சினிமா என்ற பாகுபாடு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவுக்கான விருதுகள் என்று இந்திப் படங்களுக்கு மட்டும் பிலிம்பேர் விருது வழங்கப்பட்டு வந்தது. மம்முட்டி போன்ற கலைஞர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து பேசிய பிறகு தான் தென்னிந்திய திரைப்பட விருது என்று ஒன்றை உருவாக்கி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களுக்கான விருதுகளை தனி விழாவாக எடுத்து வழங்க ஆரம்பித்தனர். இந்தப் பாகுபாடுகள் இன்னும் தொடர்கின்றன.
இந்த நிலையில், நடிகை சுருதிஹாசனிடம், ஒருவர், நீங்க தென்ந்தியாவிலிருந்து வர்றீங்க. இந்தி பேசுவீங்களா?.. எனக் கேட்டுள்ளார். இதனை கேட்ட அவர், ‘தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? நாம் எல்லோரும் படங்கள் எடுக்கிறோம். எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம். பாரபட்சம் பார்ப்பதற்கு 2022 இல் இடமில்லை’ என்று கோபத்துடன் கூறியுள்ளார். வட இந்தியர்களின் மனதில் என்றைக்குமே தென்னிந்தியாவுக்கு இடமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
1
0