நான் super star காப்பி தான் அதுக்கு என்ன இப்போ…? கொந்தளித்த சிவகார்த்திகேயன் (வீடியோ)

Author: Shree
21 June 2023, 10:07 am

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மேடையில் ஒரு முறை பேசும் போது, நான் சூப்பர் ஸ்டார் ரஜினியை போன்று பல விஷயங்களில் காப்பியடித்து தான் நடிக்கிறேன். நான் அவரது தீவிர ரசிகன் என்பதால் அவரது ஸ்டைலை பார்த்து பார்த்து அவரை போன்றே பல விஷங்களை செய்வேன். சினிமாவில் பலரும் இப்படிதான் செய்கிறார்கள். ஆனால், எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் நடிப்பில் தனித்து தெரிவார் நடிகர் கார்த்திக் மட்டும் தான் என பேசினார்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?