விஜய், தனுஷை வம்பிழுத்தாரா அஜித்? குட் பேட் அக்லியில் பகையை தீர்த்துக்கொண்ட ரசிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2025, 12:08 pm

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் ரசிகர்கள் அவரின் குட் பேட் அக்லி படத்திற்காக காத்திருந்தனர்.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்தார்.

இதையும் படியுங்க: ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!

படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் பாடல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

OG Samabavam Song Criticizes Vijay and Dhanush

ஆனால் பாடலில் உள்ள வரிகள், விஜய் மற்றும் தனுஷை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். துப்பாக்கி, பீரங்கி எல்லாம் ஒன்னா வந்தா ஒத்தையாளா சமாளிப்பேன் என்ற வரிகளும், எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும் டா என்ற வரிகளும் தான் அதற்கு காரணம்.

ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் இப்படத்துக்கு எதிராக இட்லி கடையும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை தனுஷை தாக்கிதான் இது எழுதப்பட்டதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!