பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

Author: Prasad
5 April 2025, 5:26 pm

பராசக்தி ஹீரோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 60% காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வருகிறது. இத்திரைப்படத்தின் பல காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சில காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு படமாக்க முடிவு செய்துள்ளனராம். 

old madurai set work going on for parasakthi movie

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

“பராசக்தி” திரைப்படம் 1960களில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதனால் 1960கள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக இன்றும் அந்த காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்க கூடிய பல இடங்கள் இலங்கையில் இருப்பதால் பல காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டதாம். 

பழைய மதுரையை அப்படியே…

இந்த நிலையில் மீதமுள்ள பல காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு எடுக்க முடிவு செய்துள்ளனராம். அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு இடத்தில் அமைந்துள்ள 15 ஏக்கர் தனியார் நிலப்பரப்பில் 1960களின் மதுரையை அப்படியே செட் போட்டு வருகின்றனராம். 1960களில் மதுரையில் போராட்டம் நடப்பது போன்ற சில காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் இந்த செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

old madurai set work going on for parasakthi movie

“பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வரும் நிலையில் இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் Dawn Pictures நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.  

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Leave a Reply