“கமலுடன் அந்த சீனில் நடிக்க மாட்டேன்” கறாராக சொன்ன பிரபல நடிகை: டென்ஷன் ஆன இயக்குனர்..!

Author: Rajesh
12 February 2023, 4:00 pm

70ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்தார். 1988ம் ஆண்டு சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் எழுத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரசம்ஹாரம்.

இப்படத்தில் கதாநாயகியாக நிரோஷா நடித்திருந்தார். போலீஸ் கதாபாத்திரத்தில் கமல் நடித்து வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சூரசம்ஹாரம் பட ஷூட்டிங்கில் ஒரு சீனில் முத்தக்காட்சி இடம் பெற்றால் நன்றாக இருக்கும் படக்குழுவினர் எண்ணியுள்ளனர்.

இயக்குனர் சித்ரா லட்சுமணன் நிரோஷாவிடம் இது குறித்து விவரித்து அனுமதி கேட்க, அந்த சமயத்தில் நிரோஷாவும் ஒப்புக்கொண்டாராம். அடுத்த நாள் இந்த காட்சி எடுக்கும் போது, நிரோஷா முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். முதலில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு தீடீரென்று மறுத்ததால் சித்ரா லட்சுமணனுக்கு நிரோஷா மீது மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பேசி கொள்ளவில்லையாம். கடைசியில் நிரோஷா முத்தம் காட்சியில் நடிக்க ஓகே சொல்ல, ஆனால் கமல் இந்த காட்சி வேண்டாம் என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!