முதல் நாளே அந்த ஒரு கேள்வியால் கமல்ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி.முத்து.. படுவைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
10 October 2022, 9:39 am

பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening நேற்று ஒளிபரப்பானது. இதில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் டிக் டாக் மற்றும் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார்.

அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி. சென்ற பிறகு சில நேரம் அவர் தனியாகவே இருந்தார். தனியாக இருந்தால் தனக்கு மிகவும் பயம் என்று கமல்ஹாசனிடம் கூற அதை ரசிகர்கள் நகைச்சுவையாக ரசித்தனர்.

இதன்பின், ஜி.பி முத்துவிடம் பேசிய கமல், technical கோளாறு காரணமாக நாளை தான் அனைவரும் வருவார்கள், இன்று நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் பதற்றமடைந்த ஜி.பி.முத்து, என்னால் தனியாக இருக்க முடியாது, யாரையாவது அனுப்புங்கள் என்று கேட்டநிலையில், கமல் பல விதத்தில் ஜி.பி.முத்துவிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஆதாம், ஏவாள் குறித்து பேசிய கமல், ஏவாள் வரவரைக்கும் ஆதாம் காத்திருந்தது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்க என்று கமல் கூறியநிலையில், இதற்கு ஜி.பி.முத்து, ஆதாமா அது யாரு? என்று கேட்க சற்று கமல் கடுப்பாகி விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!