எந்திரன் 3; உங்ககிட்ட வருவாரு; தப்பிச்சு ஓடிருங்க தலைவா; வைரலாகும் மீம்ஸ்,..
Author: Sudha19 July 2024, 1:36 pm
கடந்த 12 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. பலத்த எதிர்பார்ப்போடு வெளியான இந்தியன்2 எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் இது ஷங்கர் படமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது எனவும் பலரும் பதிவிட்டு வந்தனர்.
இந்தியன் 3 அடுத்த வருடம் வெளியாகும் என திரைக் குழு அறிவித்திருந்த நிலையில் இந்தியன் 2 குறித்து நிறைய மீம்ஸ் களும் இப்போதே வர ஆரம்பித்து விட்டது.

அதில் ஒன்றில் பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் அப்பா விஜகுமார் ரஜினியிடம் சொல்வது போல அடுத்து எந்திரன் 3 எடுக்க உன் கிட்டதான் ஷங்கர் வருவான்.ஷங்கர் வேணாம்,அதிதி வேணாம் தப்பிச்சு இமய மலைக்கே போயிரு மாணிக்கம்.. என்ற மீம்ஸ் இப்போது அனைவராலும் பகிரப்பட்டு பிரபலமாகி வருகிறது.