விஜய் குழந்தை மாதிரி ஆனா, அர்ஜுன் கிட்ட.. லியோவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த மடோனா ஓபன் டாக்..!

Author: Vignesh
21 October 2023, 5:01 pm

‘லியோ’ படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்தது ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. லோகேஷ் போலவே மடோனாவும் தனது கதாபாத்திரத்தை மிக ரகசியமாக வைத்து இருந்தார். ‘லியோ’ படத்தில் நடித்தது பற்றி மடோனா தனது தாயிடம் மட்டுமே கூறினாராம்.

madonna sebastian - updatenews360

லியோவின் தங்கை எலிசாவாக நடிகை மடோனா செபாஸ்டியன் திடீரென்று படத்தில் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கூடுதலாக நான் ரெடிதான் பாடலில் விஜயுடனும் ஆடியுள்ளார். தற்போது மடோனா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் பற்றி தெரிவித்துள்ளார்.

madonna sebastian - updatenews360

‘லியோ’ படத்தில் நடிக்க தன்னை அழைத்தபோது ஒரே ஒரு வரிதான் சொன்னார்கள். படத்தில் நான் என்ன செய்ய வேண்டும், கதாபாத்திரம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. நடிகர் விஜய் செட்டில் குழந்தை மாதிரி இருப்பார் என்றும், நடிக்கும் போது வேற மனிதராக மாறிவிடுவார் என்றும், ஹரோல்டு தாஸாக நடித்த அர்ஜுனை பார்த்து தான் பேச பயப்பட்டதாகவும் பின் அவரிடம் முதல்வன் படம் குறித்து பேசியதாகவும் மடோனா தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் சாருடன் இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இப்போது சிறிய கதாபாத்திரம் என்று பாராமல் நடிப்பேன். அண்ணியின் கேரக்டர்தான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. நான் ஒரு ஏழை, சாதாரண அண்ணி என்ற எண்ணம் இருந்தது. சென்னை வந்ததும் லோகேஷ் கதையைச் சொன்னார். அது என்னை உற்சாகப்படுத்தியது. நா ரெடி தான் பாடலின் முதல் ஷாட். மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

madonna sebastian - updatenews360

‘லியோ’ படத்தில் நடிப்பது அம்மாவுக்கு மட்டுமே தெரியும். நெருங்கிய நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கூட சொல்லவில்லை. ஆனால் ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன் நான் நடிக்கிறேன் என்று வெளிவந்தது. பிறகு கேட்டவர்களிடமெல்லாம் ரகசியம் காக்கச் சொன்னேன் என்று மடோனா தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ