நயன்தாராவுக்கு Important கொடுத்துட்டு என்னை டம்மி ஆக்கினாரா விக்னேஷ் சிவன்? சமந்தா வேதனை!

Author: Shree
9 June 2023, 2:27 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் சமந்தா. இருவரும் இணைந்து நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டது.

நயன்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்த இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் முதன்மை ஹீரோயினாக நயன்தாரா நடிக்க சமந்தா கதிஜா வேடத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

டாப் நடிகையாக மார்க்கெட் உசத்தில் இருக்கும்போது இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது எப்படி சரிவரும்? அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் ஏன் அந்த ரோலில் நடித்தீர்கள்? என பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி கேட்டதற்கு பதில் அளித்த சமந்தா,

எல்லோரும் அப்டித்தான் நினைத்தார்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுக்கு தான் Important ரோல் என்று… எனக்கு அப்படி தோணவில்லை இரண்டுமே அழுத்தமான ரோல் தான். நயன்தாராவுடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவங்க தனித்துவமான நடிகை. அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். அதே போன்று மகாநடி படத்திலும் இரண்டாவது ஹீரோயினாக நடித்ததும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த பாகுபாடு என புரியவே இல்லை ஏன் அப்படி வேறுபடுத்தி பார்க்கிறார்கள் என்று எல்லோரும் நடிகைகள் தான். அவரவர் ரோலில் சிறப்பாக நடித்தாலே அப்படம் நன்றாக வரும் என கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி