தலைப்புக்கு தடை இல்லை; இது பணம் பறிக்கும் முயற்சி; கோர்ட் வரை சென்ற பாலா

Author: Sudha
20 July 2024, 2:49 pm

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய்,ரோஷினிபிரகாஷ்,சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் வணங்கான். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.’வணங்கான்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் அதனால் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஆரஞ்சு புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் எஸ் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது பாலாவின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தபின் பணம் பறிக்கும் நோக்கத்தில் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதாடினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வணங்கான் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தொடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார். வணங்கான் டைட்டிலுக்கு வந்த பிரச்சினை இதன் மூலம் நீங்கியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 137

    0

    0