ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2025, 2:09 pm
விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட ஹைப்.
பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
இதையும் படியுங்க: ஃபயர் நல்லாவே பத்திக்கிச்சு..அடுத்த படம் ரெடி..பூஜையை போட்ட ரச்சிதா.!
இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக 2026க்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் கதைக்களத்தை கொண்டுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என படம் வெளியாக உள்ளதால் பான் இந்தியா படமாக மாறியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் தமிழ் திரையரங்கு உரிமையை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி கைப்பற்றியுள்ளது. வெளிநாட்டு உரிமையை 78 கோடி ரூபாய் கொடுத்து பார்ஸ் பிலிம் கைப்பற்றியது.

இதையடுத்து ஓடிடி உரிமைக்கு பலத்த போட்டி நிலவியது. இன்னும் சூட்டிங் 25 நாட்களுக்கு முடிக்க வேண்டும் என விஜய் கட்டளையிட்டுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.