பிரபல மலையாள நடிகரின் படமா? வாங்க மறுத்து தெறித்து ஓடும் ஓடிடி நிறுவனங்கள்

Author: Sudha
3 July 2024, 5:05 pm

மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆக 90 களில் திகழ்ந்தவர் நடிகர் திலீப்.
இவரும் மஞ்சுவாரியாரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பிரிவுக்கு பின் இவர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.பாவனா அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் திலீப்.

வெளியில் வந்தவுடன் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின.

இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.

அவரது 150 வது படத்தின் ஆகியவற்றின் தயாரிப்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!