அவ்வளவு காசு எல்லாம் உனக்கு தர முடியாது.. முதல்ல கிளம்பு விஜய்க்கே இந்த நிலைமையா?..
Author: Vignesh2 February 2024, 4:00 pm
லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அண்மையில், இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர். குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இதனிடையே, சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது, தளபதி 68 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிக்கட்டி பறக்கும் நடிகர் விஜய் கடைசியாக வந்த லியோ படத்தில் 590 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருந்தார். தற்போது, கோட் படத்தில் OTT உரிமையை Netflix நிறுவனத்திடம் கொண்டு சென்றுள்ளனர். விஜய் தரப்பு சொன்ன விலையை கேட்டு Netflix நிறுவனம் ஆடிப் போய்விட்டதாம். அதனால், இவ்வளவு பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று பின்வாங்க தற்போது, படக்குழு அடுத்து அமேசான் நிறுவனத்திடம் கோட் படத்தை விற்க முயற்சி செய்து வருகிறதாம்.