அவருடன் அட்ஜெஸ்ட்மென்ட்… நெனச்சாலே அசிங்கமா இருக்கு – ஒப்பான பேசிய ஓவியா!

Author:
31 July 2024, 2:07 pm

சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஓவியா. சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்க தான் செய்கிறது. பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பேசும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த உண்மையைத்தான் கூறுகிறார்கள்.

இதற்காக நான் எல்லாரும் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சினிமா என்பது ஒரு வேலை தான். இந்த வேலை இல்லனா வேலை வேற வேலை ஏதாச்சும் செஞ்சி பிழைச்சிக்கலாம். கண்டிப்பா வேற வேலை கிடைக்கும்.

அதுக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பணிந்து போகணும் அப்படிங்கறது ரொம்ப தவறான விஷயம். யாராவது அப்படி கேட்டா தயவு செய்து அதைப்பற்றி துணிந்து வெளியில் வந்து சொல்லுங்கள். அப்போ தான் அவங்களுக்கு ஒரு பயம் வரும். இந்த காலத்திலும் தயாரிப்பாளர், இயக்குனர்கள், லைட் மேன், கேமரா மேன் இப்படி நினைச்ச பேர் கூட எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நடிக்க வேண்டும் என்பதை நினைத்தாலே ரொம்பவும் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது.

oviya-updatenews360

அப்போலாம் 18 வயசு பெண்களுக்கு எதுவுமே தெரியாது. அந்த நேரத்தில் சிலர் மிஸ் யூஸ் பண்ணுவாங்க ஆனால் வயதுக்கு கடந்த பிறகு தான் நம்மளுக்கு அதைப் பற்றிய புரிதல் வரும். ஆனால், இப்போது இருக்கும் பெண்கள் அப்படி இல்லை எல்லோருமே தைரியமான பெண்களாக தான் இருக்கிறார்கள். 18 வயதிலேயே எல்லோருக்கும் எல்லாமே தெரிந்து விடுகிறது என ஓவியா மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்