பிரபல கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கப்போகும் ஓவியா – அவரே சொன்ன ஹேப்பி நியூஸ்!

Author:
5 November 2024, 5:50 pm

கேரளாவை சேர்ந்தவரான நடிகை ஓவியா தென்னிந்திய சினிமா படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

savior movie

அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்தியதோடு அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. நடிகை ஓவியா மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். களவாணி திரைப்படத்தில் நடித்து 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

savior movie

அந்த திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த ஓவியாவுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை அடுத்து மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா , கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம் , மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களில் ஓவியா நடித்திருக்கிறார் பிக் பாஸ்க்கு பிறகு அவரது கதை தேர்வு சரியில்லாததால் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார் ஓவியா .

savior movie

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிகை ஓவியா “சேவியர்” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க ஓவியா ஹீரோயின் ஆக நடிக்கிறார் .

இவர்களுடன் பிரபல நடிகரான விடிவி கணேஷ் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் ஓவியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

savior movie

இதையடுத்து இந்த படத்தின் மீதான ரசிகர்கள் கவனம் தற்போது அதிகரித்திருக்கிறது. முன்னதாக ஹர்பஜன் சிங் பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவுக்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 135

    0

    0